Popular Posts

Tuesday, February 7, 2012

ஆய்வை சார்ந்த அனைத்து மூல தரவுகளையும் தேடி படிக்கவேண்டும்

மைசூர் பல்கலைகழக வரலாற்று துறை  தலைவர் பேராசிரியர். எம்.வி . ஸ்ரீநிவாஸ் (72 ),அவர்கள் தனது ஆய்வுக்கட்டுரையை "வரலாற்று வரைவியல் விவாதங்கள் " என்ற தலைப்பில் வெளயிட்டார்  அவரிடம் ஆய்வு குறித்து பேசுகையில் அவர் பகிர்ந்து கொண்டதாவது: 

 (இடது புறம் உள்ளவர் பேராசிரியர் எம்.வி. ஸ்ரீநிவாஸ்)

பிறந்து வளர்ந்ததெல்லாம் கிராமத்து பின்னணியில் தான் .எங்கள் குடும்பம் ஒரு நடுத்தரகுடும்பம். பின்னர் கல்விகற்று இன்று மைசூர் பல்கலைகழக பேராசிரியராக பணியாற்றுகிறேன். 

  இந்த தலைப்பை தேர்ந்தெடுத்து  ஆய்வு கட்டுரை சமர்பிக்க காரணம் நமது வரலாற்று நூல்களில் உள்ள பிழையான பதிவுகளை அடையாளபடுத்துவது தான். இந்த தவறுகளின் தன்மைகளையும், அதன் விளைவுகளையும் விளக்கியுள்ளேன். மேலும் அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் சொல்லியுள்ளேன்.    நம் ஆய்வை சார்ந்த அனைத்து மூல தரவுகளையும்  தேடி படிக்கவேண்டும் . அது ஐரோப்பிய மொழியோ அல்லது பாரசீக மொழியோ அதனை முழுமையாக கண்டு அறியவேண்டும். எனது ஆய்வில்  மைசூர் மற்றும் பீஜப்பூர்  அரசுகளுக்கிடையே நடைபெற்ற போரில் இரு நாடுகளும் தாம் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளன. இதன் வரலாற்று பின்னணியுடன் பிழைகளை கண்டரிந்துள்ளேன்.

  இங்கு பலதரப்பட்ட துறைகளில் பல அரிய ஆய்வுகள் மேற்கொள்ள முடியும். அது தேர்ந்தெடுக்கும் துறை, ஆய்வு காலம் மற்றும் தேர்வு செய்த தலைப்பை பொருத்ததாகும். ஒரு ஆய்வாளர் தனது துறையையும்,ஆய்வு தலைப்பையும்  தனது ஆர்வத்தினாலும் , தனி விருப்பதினாலும் அதன் பயனை முன்னிடுமே   தீர்மானிக்கிறான். அதேவேளையில் ஒரு நல்ல ஆராய்ச்சி 'கைடு' வை தேர்வு செய்யவேண்டும். அதற்க்கு முன்பு நாம் ஆய்வுக்கு எடுத்துள்ள   துறை சார்ந்து ஆழமாகவும் , விரிவாகவும் புத்தகங்களை வாசித்திருக்க வேண்டும்.

 புதிய தலைமுறை ஆய்வாளர்கள் சிறந்த வழியில் ஆய்வு மேற்கொள்ள புதிய 'தியரி' களும்,' மாடல்' களும் அதிகளவில் வந்துள்ளன. இந்த ஆய்வுமுறைகளை திரும்ப திரும்ப செய்து பார்ப்பதன் வாயிலாக புதிய வழிமுறைகளை சிறப்பாக செயல் படுத்தமுடியும். இதனால் நமது வரலாற்று பணிகளை அதிகரித்து கொள்ள முடியும்.
இதுவரை , 13 மொழிகளில் , 26  புத்தகங்கள் எழுதியுள்ளேன். இன்னும் வரலாற்று ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்வேன். இன்றைய கலா சூழலில் பள்ளிகளில் கர்பிகபடும் வரலாறு கல்வி மாணவர்களை ஆய்வு துறை சார்ந்து இயங்க போது மானதாக உள்ளதா? என்ற கேள்வியை  பலர் எளுபுவதுண்டு . வரலாறு என்பது நமது கல்விமுறையின் ஒரு முக்கிய பகுதியாக திகழ்கிறது. அங்கு அளிக்கப் படும் கல்வியின் வாயிலாக மாணவர்கள் மத்தியில் தாக்கம் ஏற்பட்டு அதனால்  ஆய்வு துறை சார்ந்து செயல்பட தூண்டும்.'

வரலாறு என்பது "நம்பிக்கைகளின் கொள்கையே"

தந்தை பெரியார் ஹாலில் நடைபெற்ற கலாசார பிரிவு அரங்கில் நடைபெற்ற கட்டுரை சமர்ப்பிப்பில் கலந்து கொண்டோம் அங்கே பெங்களுரு பல்கலைகழக வரலாற்று துறை இணை பேராசிரியர் திருமதி எம் வீ உஷா தேவி அவர்களை சந்தித்தேன் அவர் நம்மிடம் , தன்னை   பற்றி பகிர்ந்து கொண்டதிலிருந்து;

பிறந்து வளர்ந்ததெல்லாம் பெங்களூரு தான். பெற்றோர்கள் படிப்பறிவற்றவர் கள். ஆனாலும் நான் படிப்பதை பெருதும் விரும்பினர். தற்பொழுது பெங்களூரு பல்கலைகழக  வரலாற்று துறையில் பணியாற்றிவருகிறேன். பெங்களூருவை சேர்ந்த பெண் கல்வியாளர்களில்   எனக்கு ஒரு சிறப்பு உண்டு .அது என்ன வென்றால் " நான் தான் கர்நாடகாவில்  பல்கலைகழக மானிய  குழுவில் ஜே. ஆர். எப் உதவி தொகை பெற்ற முதல்பெண்.

என் ஆய்விற்கான தலைப்பு "நவீன இந்தியாவில் சமூக பொருளாதார வரலாறு". ஏன் இந்த ஆய்வு மேற்கொள்கிறேன் என்றால் இந்தியாவில் ஏராளமான சமுதாய பிரச்சனைகள் நிலவுகின்றன. அவற்றில் முதன்மையானது 'வறுமை'. இந்தியா அடிமை பட்ட காலத்தில் வறுமை பெருகி மக்கள் துன்புற்றனர். ஆனால், சுதந்திரம் அடைந்த பின்னரும் அந்நிலை மாறவில்லை . பசுமை புரட்சி ஓரளவிற்கு வறுமையை போக்கினாலும். அது மக்களின் உணவு  தேவையை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. அதனை விளக்கும் வகையிற் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 எனது ஆய்வின் வாயிலாக  வறுமை உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சனை களை போக்குவதற்கு சில  வழிமுறைகளை பரிந்துரை செய்துள்ளேன். அவை, தொலைநோக்கு பார்வையுடன் கொள்கைகளை உருவாக்குதல். திட்டமிடும் வேளையில் முன்னெச்செரிக்கை உடன் முடிவுகள் எடுத்தல், சீர்படுத்த வல்ல மதிப்பீட்டு  முறைகளை கையாளுதல், நடைமுறையில் உள்ள சிறந்த அறிவியல் தொழில் நுட்ப உக்திகளை கையாளுதல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை  உருவாக்குதல் முதலியவற்றின் வாயிலாக இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்கலாம்.

நான் இந்தளவிற்கு ஆராய்ச்சித்துறையில் சிறந்து பணியாற்ற காரணம் எனது 'கைடாக' இருந்த முனைவர் சந்திரசேகர் மற்றும் முனைவர் வீ . ராதப்பன் அவர்களே ஆவர். அவர்கள் பெங்களூரு பல்கலைகழக பேராசிரியர்களாக பணியாற்றிவர்கள்.

 இன்று, வரலாறு திரிக்கப்படுகிறது என்று கடுமையான விமர்சனம் எழுகிறது. உண்மையில் வரலாறு என்பது நம்பிக்கைகளின் வெளிப்பாடுகள் தான். அந்நம்பிக்கை மேன்மை  உடயதாகவோ, கீழ்மை உடயதாகவோ இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.  அதனால் வரலாறு என்பது "நம்பிக்கைகளின் கொள்கையே"

Sunday, February 5, 2012

இயந்திரமயமாக்கப்பட்ட மீன் பிடி படகுகளால் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்பு

இயந்திரமயமாக்கப்பட்ட மீன் பிடி படகுகளால் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்பு 
ஆய்வாளர் அனுராதா

 அனுராதா .த (33 )சென்னை லயோலா கல்லூரி பொருளியல் துறை விரிவுரையாளர், ஆய்வின் தலைப்பு 'இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடித்தலின் விளைவுகள்' .
இந்த தலைப்பை தேர்ந்தெடுக்க காரணம்  சுனாமி நிகழ்வே ஆகும் . அச்சமய த்தில் அம்மக்களின் கஷ்டங்களை நேரில் அறிய வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து, இம்மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய எண்ணினேன் ஆதலால் இத்தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.  
தமிழகத்தில் இயதிரமயமாக்கப்பட்ட மீன் பிடி முறை 1983 - ஆண்டு  இந்தோ நார்விஜியன் ஒப்பந்தத்தின் வாயிலாக நடைமுறை படுத்தப்பட்டது. அதன் வாயிலாக மீன்பிடித்தொழில் இன்று பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது . இதனால் சாதாரண மீனவ மக்கள் பயனடைந்துள்ளனர், அதேவேளையில் மீன் பிடி சாராத மக்களும் இத்தொழிலில் நல்ல வருமானம் பார்க்கின்றனர். இந்தியா மீன் உற்பத்தியில் உலகளவில் சீனாவிற்கு அடுத்து இரண்டாம் இடம் வகிக் கிறது. மேலும் கடல் வுணவு ஏற்றுமதியால் அன்னியசெலாவனியும் அதிகரி த்துள்ள்ளது. மேலும் கடல் சார்ந்த தொழில் முறைகளும் அதிகரித்துள்ளது இதனால் பலரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

       அதேவேளையில் பல பின்னடைவுகளும் ஏற்ப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும் . இயந்திர படகுகள் ஆழ்கடலில் சென்று மட்டுமே மீன் பிடிக்கவேண்டும் என்ற விதி வுள்ளது. ஆனால் அது கடை பிடிக்கபடு வதில்லை. இதனால் கரையோரம் மீன் பிடிக்கும் நாட்டு படகு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இம்முறையால் சிறிய வகை மீன்கள் முதல் குஞ்சுகள் வரை அரித்து எடுக்கப்படுவதால் மீன் வளம் குரயத்தொடங்கி யுள்ளது. அதேவேளையில் பெட்ரோல் மற்றும் எரிபொருள்களின் விலை உயர்வால் மீனவர்களால் சமாளிக்க இயலாத நிலை ஏற்பட்டு மீன் விலை ஏற்றம் பெறுகிறது. அதனால் சராசரி மக்களால் மீன் உணவை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
இம்மக்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவிகள் உரிய முறையில் சென்றடை வதில்லை. இதனால் அவர்கள் துன்பபடும் நிலைதான் நிலவிவருகிறது. இதனை தவிர்க்க  'பே ஆப் பெங்கால்' எனும் பன்னாட்டு அரசு தொண்டு நிறுவனம் உதவி வருகிறது.

 இந்நிறுவனத்தின் வாயிலாக கடற்கரை சார்ந்த மக்களுக்கு சுயதொழில் பயிர்ச்சிகளும், மாற்று வேலைவைப்புக்கான பயிர்ச்சிகளும் மற்றும் பேரிடர் காலங்களில் உதவி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நான் குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதி மீனவர்களின் மீன்பிடிமுரைகளை ஆய்வு செய்ததால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து அறிய முடியவில்லை. மீனவ பெண்கள் குறித்த புத்தகம் எழுதிக்கொண்டுள்ளேன். விரைவில் வெளி இடுவேன்' என்கிறார்.

velgalthaan kongu mandalaththin moodhaadhayargal.-aaraaichiyaalar sasikala

'வேள்'கல்தான் கொங்கு மண்டலத்தின் தொல்குடிகள் 

32 வது தென்னிந்தியா வரலாற்று பேரவையில்  வரலாற்று வரைவியல்  மற்றும் புராதான வரலாறு பிரிவுகளின்கீழ்  நடைபெற்ற ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் நிகழ்வில் கொங்கு மண்டல வரலாற்றை விவரித்து தனது கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்தார் சசிகலா(33 ) .

         சென்னை தொல்பொருள் துறை ஆராய்ச்சி துறை ஆய்வு மாணவியாகிய அவரிடம் பேசியதிலிருந்து :

பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரை மாவட்டம் . அப்பா கரூர் பகுதியை சேர்ந்தவர் ஆதலால் கொங்கு மண்டல தொடர்பு பிறப்பிலே உண்டு. வேலை வேண்டும் என்ற சராசரி மனப்பான்மையுடன் , இளம் அறிவியல் பட்டம் பெற்றேன் .ஆனால் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு முதுகலையில் தமிழ் சங்க இலக்கியம் படித்தேன். அவ்வேளைகளில் வரலாற்று ஆய்வுகள் குறித்து நிறைய தெரிந்து கொண்டேன். பின் சென்னையில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி துறையல் வரலாற்று ஆய்வு குறித்த பட்டயபடிப்பு முடித்தேன். இதன் வாயிலாக கொங்கு மண்டலத்தின் வரலாற்றை அறிய விரும்பினேன் . ஆகையால் எனது ஆய்வின் தலைப்பை "கொங்குநாட்டு புராதான வரலாறு சங்கஇலக்கியத்தின்  வாயிலாக ஒரு பார்வை" என்று தேர்ந்தெடுத்தேன். 
கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் கோவை,ஈரோடு,சேலம்,நாமக்கல் மற்றும் கரூர் பகுதிகளில் "வேள்"கள்  எனும் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ள்ளனர். இவர்களே அப்பகுதியின் தொல்குடி மக்களின் அரசர்கலாக விளங்கியுள்ளனர். இப்பகுதியில் இயற்கையிலே மணிகள் (gems ) அதிகளவில் கிடைத்துள்ள்ளன இதனால் இப்பகுதி மக்கள் அதனை சார்ந்த தொழில் ஈடுபட்டு வெளிநாடுகளிலும் வாநிபத்தொடர்பு கொண்டுள்ளனர். இதற்க்கு தற்போதய கரூர் மாவட்ட முசிறி நகரம் துறை முகபட்டினமாக விளங்கிவந்துள்ளது. இவ்வேள்கள் எண்ணிக்கையில் பலவாக இருந்தனர் . அவர்கள் தங்களுக்குள் தொடர்ச்சியாக போரிட்டு கொண்டிருந்தனர். 

இன்று 'காங்கேயம் ' என்றழைக்கப்படும் பகுதி பண்டைய காலத்தில் 'காமூர்' என அளிக்கப்பட்டுள்ளது . காங்கயம் என்றால் நீர் சூழ்ந்த நிலபகுதி என பொருள் நீர் சூழ்ந்த பகுதியில் கால் நடை வளர்ப்பு என்பது முக்கியதொளில் குறிப்பாக அக்காலத்தில் மாடு செல்வமாக கருதப்பட்டது. இதனால்தான் இப்பகுதியில் இன்றளவும் கால்நடைகள் அதிகளவில் காணப்படுகின்றன. இப்பகுதியை ஆண்ட வேள் மன்னன் 'கழுவுள்' என அலைக்கப்பட்டுல்லான் . இம்மன்னனை எதிர்த்து 14 வேள் கள் சண்டையிட்டு அப்பகுதியை கைப்பற்றிய தாகவும், அதனை தொடர்ந்தே சேரன் இந்நாட்டை வெற்றிகொண்டான்.  சேரன் ஆட்சி ஒரு வணிகத்தை மையமாக கொண்டே மூவேந்தர் ஆட்சிகளும் விளங்கின .பின்னர் பொருளாதார சிரழிவு மற்றும் போர்களினால் மூவேந்தர்களும் தங்களின் செல்வாக்கை இழந்தனர். ஆனால் வேள்கல்  11  ஆம் நூற்றாண்டுவரை மக்கள் மத்தியில் சிறப்புற்று விளங்கியுள்ளனர். இதற்க்கு சான்றுகள் தமிழகத்தின் கடைஎழு  வள்ளல்களும் வேல்களே . ஆகையால் கொங்கு பகுதி மக்களின் வாழ்வோடு வொன்றிய வேல்களே அப்பகுதி மக்களின் தலைவர்களாக விளங்கினர் என்பது தெரிய வந்துள்ளது.  வரலாற்றாசிரியர்கள்  மன்னன் ,வேள் மற்றும் வேந்தன் என தமிழக ஆட்சிமுறையை பிரிக்கின்றனர். இதில் மன்னன் என்பது இனக்குழு தலைவர் என்றும் வேள் என்பது பல இனக்குழுக்கள் ஒன்றாக இணைந்த பகுதி என்றும் வேள் களுக்கு பின்னர் வந்தவர்களே வேந்தர்கள் என்று அறிய முடிகிறது. மேலும் சங்க இலக்கியத்தில் வேந்தன் என்ற சொல்லே இடம் பெறவில்லை.
இவற்ற்றை கொடுமணல் (ஈரோடு)ஆய்வுகளும், பொருந்தில் (பழனி) ஆய்வுகளும் தெரிவிக்கின்றன'. என்கிறார்.

மேலும்' இன்றைய திரை படங்களில் வரலாறு தவறாக் சித்தரிக்கபடுகிறது. படைப்பாளிகள் தங்கள் என்னகளுக்கேர்ப்ப வரலாற்றில் தமது கருத்தாக்கங்களை திணிக்கின்றனர். இது வரலாற்றை பிரள செய்யும் . அதே போல இன்றைய இளம் தலைமுறை மக்கள் வரலாற்றை புரந்தல்லுகின்றனர். என்னதான் படித்து பெரிய பணிக்கு போனாலும் நம் வரலாறு தெரியவில்லை என்றால் அவர்களால் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்திட முடியும். முதலில் தன்வரலாற்றை  அறிந்தால்தான் எதிர்காலத்தை பற்றி புரிந்து கொள்ள முடியும் ஆகையால் அனைவரும் வரலாற்றை அறிந்து கொள்வது இன்றியமையாதது ஆகும்'என்கிறார்.

thennindhiya varalattru peravaiyin 32 amarvu oru paarvai

தெனனிந்திய வரலாற்று பேரவையின் 32 வது அமர்வு "ஒரு பார்வை" 

வரலாற்று துறை ஆய்வு அறிஞர்களும் ,கல்வியாலர்களும் சங்கமிக்கும் திருநாளாகிய  தெனனிந்திய வரலாற்று பேரவையின் 32 ஆம் ஆண்டு அமர்வு சென்னைப் பல்கலைகழகத்தில் பிப். 3 -5 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது . இந்நிகழ்வில் தமிழகம்,ஆந்திர ,கேரளா, கர்நாடகா ,புதுவை மற்றும் ஓடிஸா ஆகிய தென் மாநில வரலாற்றறிஞர்கள்   ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.    
 இந்நிகழ்வில் ஆய்வு கட்டுரைகளை வரலாற்றுவரைவியல் மற்றும் புராதன வரலாறுகள், சமூகவியல், பொருளியல், அரசியல் மற்றும்  கலாசாரம் ஆகிய ஐந்து பெரும் பிருவுகளின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சியின் துவக்க நாளான  வெள்ளி அன்று பழமையான நாணயங்களின் கண்காட்சி நடைபெற்றது.  இக்காட்சியில் சோழர் கால நாணயங்கள் , முகாலாய ,விஜயநகர, கிழக்கிந்திய கம்பனி மற்றும் தற்கால நாணயங்களும் பணத்தாள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
 இக்கண்காட்சியை இந்திய வரலற்றுதுரை  மாணவர் குகன் பாபு அழகேசன்  நடத்தினார் அவரிடம் உரையாடியதிலிருந்து; 
 "இங்கு வைக்கப்பட்டிருக்கும் சோழர்களா நாணயங்கள் தமிழகத்தின் மைய மாவட்டங்கலான் திருச்சி ,தஞ்சை மற்றும் கரூர் ஆகிய இடங்களில் காவிரி கரையோரங்களில் சேகரிக்கப்பட்டவை, விஜயநகர மற்றும் முகலாய காலத்து நாணயங்கள் தேசிய அளவில் நடைபெறும் நாணய கண்காட்சியில் இருந்து வாங்கப்பட்டவை. ஆங்கிலேயர் கால் நாணயங்கள் நாணய வங்கிகளில் இருந்து பெறப்பட்டவை .
 இவற்றில் சிறப்பு என்னவென்றால் எட்வர்டு கால நாணயங்கள் தான். ஏனெனில் பலருக்கு எட்வர்டு பற்றி தெரியாது . விக்டோரியா மகாராணிக்கும்,ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கும் இடைப்பட்டகாலத்தில் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரின் ஆட்சியின் அடையாளங்களாக அவை திகழ்கின்றன. பழங்கால நாணயங்களில் சிறப்பு வாய்ந்தது கி.பி 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தங்கம் ,மற்றும் வெள்ளி நாணயங்களை குறிப்பிடலாம். 

வெளிநாட்டு  நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் மொத்தம் 75 நாடுகளை சேர்ந்தவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை சேகரிக்க ,மொத்தம் ஒன்னரை லட்சம் ரூபாய் செலவானது. 
 இவை அனைத்தும் எனது சொந்த உழைப்பில் சேகரித்தவை. படிப்பை பத்தாம் வகுப்புடன் நிறுத்தி வேலைக்கு சென்றேன் . அப்பொழுது கிடைத்த சம்பளத்திலிருந்து வாங்கியவை தான் இவை, பெற்றோரும் தங்களால் இயன்றவரை உதவி செய்தனர் .
இவ்விழாவில் கண்காட்சிக்கு வைக்கவேண்டும் என துறை தலைவரிடம் அனுமதி கேட்டேன் அவர் பெரிய நிகழ்வு இங்கே தரமற்ற படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டால் பார்வையாளர்கள் விரும்பமாட்டார்கள் ஆகையால் மாதிரியை சமர்ப்பிக்கும் படி கேட்டார் . நான் அளித்த மாதிரியை பார்த்தவர் உடனடியாக அனுமதி அளித்தார். இன்று பலரும் வந்து பார்வயிட்டு வால்த்திசெல்கின்றனர். இவற்றில் உயரியதாக நான் கருதுவது தொல்பொருள் ஆரைச்சிதுரையினர் வந்து பாராட்டியதுடன் வருங்காலத்தில் ஆய்வுகளுக்கு தேவையான பழங்கால நாணயங்களை வழங்குவதாக கூரிசென்றனர் இது எனது முயற்ச்சிக்கு கிடைத்த உயரிய வெகுமதி எனகருதுகிறேன்" என்கிறார் .


Sunday, October 2, 2011

இலவச கல்வி அளிக்கும் கல்லுரி மாணவர்கள்



சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் ஏழை மாணவர்களுக்கு இலவச 'ட்யுசன்' நடத்தி வருகின்றனர் மூன்று இளைஞர்கள் .
 கல்லுரி மாணவர்களான நாக பூஷணம் , ரவிகாந்த், வீராசாமி ஆகியோர் தம் பகுதி மாணவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டி கடந்த ஓராண்டாக அப்பகுதியில் உள்ள ஆதி ஆந்திர சமதர்ம சங்க கட்டிடத்தில் மாலை நேர இலவச பயிற்சி அளித்து வருகின்றனர். 
இம்மையத்தில் 20 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர் . இதன் காரணமாக மாணவர்களின் கல்வி மேம்பாடு அடைந்துள்ளது . படிப்போடு நின்று விடாமல் அவர்களின் அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யும் நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர். 
இது குறித்து நாக பூஷணம் கூறுகையில் , நான் அரசு கல்லூரியில் மென்பொருள் தொழில் நுட்ப கல்வி படித்து வருகிறேன் . நான் படிப்பதற்கு மிகுந்த சிரமமம் ஏற்ப்பட்டது .எப்படியோ தடைகளை தண்டி படித்து விட்டேன் ஆனால் இங்கு நிறைய பேர் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள் .அவர்களும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை கடந்த ஆண்டு தொடங்கினோம்.

veera sivadevan: vinayagar sadhurthy silai karaippu

veera sivadevan: vinayagar sadhurthy silai karaippu: பட்டினப்பாக்கம் கடற்கரை பிள்ளையார் சிலைகளினால் நிரம்பி வழிந்தது